ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓராண்டில் 598 ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்ட்
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனங்கள் இயக்கியவர்களின் 598 ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனங்களை இயக்குபவர்களை தொடர்ந்து கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர்.இதில் மாவட்டம் முழுவதும் மது போதையில் வாகனங்கள் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் ஓட்டுவது, அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறி செல்வது, அலைபேசியில் பேசிக்கொண்டே வாகனங்கள் இயக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களின் வாகன ஓட்டுநர் உரிமத்தை போலீசார் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலருக்கு சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்வார்கள்.இதில் 670 ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.இதில் சம்பந்தப்பட்டவருக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படும். அதன் பின் விளக்கம் பெற்று ஓட்டுநர் உரிமம் 90 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும். அதுவரை சம்பந்தப்பட்டவர் வாகனங்களை ஓட்ட முடியாது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024 ஏப்.,1 முதல் 2025 மார்ச் 31 வரை 670 உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதில் 598 ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.72 உரிமங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தெரிவித்தார். தொடர்ந்து வாகன ஓட்டிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.