உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாதுகாப்பு, கண்காணிப்பு பணிக்கு  ரூ.75 லட்சத்தில் 7 புதிய வாகனங்கள்

பாதுகாப்பு, கண்காணிப்பு பணிக்கு  ரூ.75 லட்சத்தில் 7 புதிய வாகனங்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு பணிக்காக ரூ. 75 லட்சத்தில் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்ட 3 வாகனங்கள் உட்பட 7 வாகனங்களை டிரைவர்களிடம் ஒப்படைத்து எஸ்.பி., சந்தீஷ் பாதுகாப்பு பணியை துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக புதிய வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். இதன்படி ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு ரூ.75 லட்சத்தில் 7 கார்கள் வழங்கப் பட்டுள்ளன. இதில் 3 வாகனங்களில் 360 டிகிரி கண்காணிப்பு வகையில் கேமரா பொருத்தப் பட்டுள்ளது. இந்த வாகனங்களை போலீஸ் ஸ்டேஷன் பயன்பாட்டுக்கு வழங்கிடும் நிகழ்ச்சி ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம் ஸ்டேஷன்கள் மற்றும் வி.வி.ஐ.பி ரோந்து வாகனம் பயன்பட்டிற்கு வழங்கி, எஸ்.பி., சந்தீஷ் அவற்றை இயக்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை டி.எஸ்.பி., முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் பங்கேற்ற னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி