உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 24 பணியிடங்களுக்கு 700 பேர் விண்ணப்பம்

24 பணியிடங்களுக்கு 700 பேர் விண்ணப்பம்

திருவாடானை : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் திருவாடானை தாலுகாவில் 136 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் 24 அங்கன்வாடி மையங்களுக்கு 20 பணியாளர்கள், நான்கு உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்ய அறிவிக்கப்பட்டது.இப் பணிகளுக்கு ஏப்.,23 மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்தனர். அதன்படி விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டது. மொத்தமுள்ள 24 காலி பணியிடங்களுக்கும் 700 பேர் விண்ணபித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !