உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி கார் விபத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த 9 பேர் காயம்

பரமக்குடி கார் விபத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த 9 பேர் காயம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவு விழாவில் கலந்து கொள்ள வந்த கார், பரமக்குடி அருகே கமுதக்குடி நான்கு வழிச்சாலையில் விபத்துக்குள்ளானது. இதில் ஒன்பது பேர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர்.நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டி கிராமத்தில் இருந்து இமானுவேல் சேகரன் நினைவு விழாவில் கலந்து கொள்ள 9 பேர் காலை 6:39 மணிக்கு கமுதக்குடி நான்கு வழிச் சாலையில் வந்தனர். அப்போது நடுவே அமைக்கப்பட்ட தடுப்புகளில் தூக்கத்தின் காரணமாக இடித்து விபத்து ஏற்பட்டது. இதில் படையப்பாவிற்கு (வயது 26) இரண்டு கால்கள் உடைத்து, இடது கனுக்கால் அகற்றப்பட்டது. ரஞ்சித் குமார், ரணில் குமார், ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிரசாந்த், பிரவீன், ஸ்ரீராம், சரத்குமார், உதயன், சரத்குமார் கார் டிரைவர் சிகிச்சையில் உள்ளனர். பரமக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை