உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பயன்பாட்டிற்கு வந்த கர்ப்பிணிகள் பரிசோதனை செய்யும் கட்டடம்

பயன்பாட்டிற்கு வந்த கர்ப்பிணிகள் பரிசோதனை செய்யும் கட்டடம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை செய்யும் கட்டடம் பயன்பாட்டிற்கு வந்ததால் கர்ப்பிணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டாரத்திற்கு உட்பட்ட கர்ப்பிணிகள் பயனடையும் வகையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கர்ப்ப கால பிரச்னைகள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணிகள் பரிசோதனை, பிரசவ அறைகள் சேதமடைந்தன. இதையடுத்து ரூ.8 லட்சத்தில் கர்ப்பிணிகள் அறையை பராமரிப்பு செய்து புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கட்டடம் புதுப்பிக்கும் பணி முழுமையாக மேற்கொள்ளப்படாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை கட்டடம் இன்றி ஓராண்டுக்கும் மேலாக கர்ப்பிணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து கட்டடப் பணிகள் முடிவடைந்து கட்டடம் பயன்பாட்டிற்கு வந்ததால் கர்ப்பிணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ