உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டில் உரசும் பஸ்சால் தடுமாற்றம்

ரோட்டில் உரசும் பஸ்சால் தடுமாற்றம்

பரமக்குடி: பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பள்ளத்தால் பஸ்கள் ரோட்டில் உரசும் நிலை உள்ளது. பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் ராமநாதபுரம் ரோட்டில் உள்ளது. ரோடு கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மூன்று அடிவரை உயர்ந்துள்ளது. இதேபோல் பஸ் ஸ்டாண்ட் அவ்வப்போது நடந்த பணிகளால் உயரமாகியுள்ளது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்டிற்கும், ரோட்டிற்கும் இடையில் சுமார் மூன்று அடி வரை தாழ்வான நிலையில் பள்ளம் உருவாகி யுள்ளது. தற்போது ஏராளமான தாழ்தள பஸ்கள் செல்கின்றன. இதனால் ஒவ்வொரு முறை பஸ்கள் உள் நுழையும் மற்றும் வெளியில் வரும் இடங்களில் ரோட்டில் உரசும்படி இருக் கிறது. இவற்றால் டிரைவர்கள் தடுமாறும் சூழலில், பயணிகள் திகைப்பில் உள்ளனர். தொடர்ந்து அரசு பஸ்கள் சேதமடையும் நிலையில் ரோடு பகுதியை இணைக்கும் பள்ளத்தை உடனடியாக சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ