மேலும் செய்திகள்
டிச.16ல் தபால்சேவை குறை தீர் முகாம்
07-Dec-2024
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் தாசில்தார் சாமிநாதன் பெயரில் வாட்ஸ்-ஆப் துவங்கிய வட மாநில கும்பல் வசூல் வேட்டையில் ஈடுபட்டதால் தாசில்தார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.ராமநாதபுரம் தாசில்தாராக இருப்பவர் சாமிநாதன் 55. இவரது பெயரில் முகநுால், வாட்ஸ்-ஆப் என சமூக வலைதளங்களில் கணக்கு துவங்கி வைத்துள்ளார். இதில் இவரது பணிகள், நடவடிக்கைகள் குறித்து பதிவிட்டு வருகிறார். இவரது சமூக வலைதளம் பக்கத்தில் இருந்து இவரது படத்தை திருடிய மர்ம கும்பல் தாசில்தார் சாமிநாதன் பெயரில் வாட்ஸ்-அப் கணக்கு துவங்கி நலம் விசாரிப்பதோடு பணம் கேட்டு வருகின்றனர். சாமிநாதன் உடல் நலக்குறைவால் அவசர சிகிச்சையில் இருப்பதால் அவசரமாக பணம் வேண்டும்.ஜி-பே கணக்கில் அனுப்பினால் திரும்பி வந்த பின் பணத்தை தந்துவிடுவதாக தகவல் அனுப்பி வருகின்றனர். இதில் தாசில்தார் சாமிநாதன் மீது பரிதாபப்பட்டு பணம் அனுப்பி வருகின்றனர். இது குறித்து பணம் அனுப்பியவர்கள் பணம் வந்து சேர்ந்ததா என தாசில்தார் சாமிநாதனிடம் கேட்டதால் அதிர்ச்சியடைந்தார். சம்பந்தப்பட்ட வாட்ஸ்-ஆப் எண் வடமாநிலத்தை சேர்ந்தது என்பது தெரிய வந்தது.இதையடுத்து சாமிநாதன் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். தனது நண்பர்கள், உறவினர்களுக்கு எனது பெயரை பயன்படுத்தி பணம் அனுப்ப சொன்னால் அனுப்ப வேண்டாம் என குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார்.
07-Dec-2024