குடிநீர் ஊருணியை சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடையில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் ரோட்டோரத்தில் அமைந்துள்ள ஊருணி நீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில் ஊருணியைச் சுற்றிலும் முள்வேலி இன்றி திறந்த நிலையில் உள்ளதால் ஊருணி நீரை கால்நடைகள் மாசுபடுத்தி வருகின்றன. செங்கமடை பகுதியில் பிரசித்தி பெற்ற கருப்பண சுவாமி கோயில் உள்ளதால் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது.எனவே ஊருணியில் புதர்களை அகற்றுவதுடன், முள்வேலி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.