/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓடும் ரயிலில் ஏற முயன்றவர் தண்டவாளத்திற்குள் விழுந்தார்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
ஓடும் ரயிலில் ஏற முயன்றவர் தண்டவாளத்திற்குள் விழுந்தார்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
ராமநாதபுரம், : ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நேற்றுமுன்தினம் மாலை 6:30 மணிக்கு சென்னை செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்ட பின் ஓடிச் சென்று முன்பதிவில்லாத பெட்டியில் ஏற ஒருவர் முயன்றார். நிலைதடுமாறி விழுந்தவர் ரயிலுக்கும் தண்ட வாளத்திற்கும் இடையில் சிக்கிக்கொண்டார்.இதனை கவனித்த ரயில்வே போலீசார் உடனடியாக ரயிலை நிறுத்தி தவறி விழுந்தவரை மீட்டு அவரை எச்சரித்தனர். ஓடும் ரயிலில் ஏறக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பினர். அவர் பெயர், விபரம் தெரியவில்லை.