உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அடிப்படை வசதிகள் இல்லாத நகராட்சி பெண்கள் பள்ளி 

அடிப்படை வசதிகள் இல்லாத நகராட்சி பெண்கள் பள்ளி 

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மாணவிகள் கல்விதிறன் பாதிக்கப்படுகிறது.ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 44 ஆண்டுகள் ஆகிறது. இங்கு 900 மாணவிகள் கல்வி பயில்கின்றனர். மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப 28 வகுப்பறைகள் இருக்க வேண்டும். 18 வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால் திறந்த வெளி வகுப்பறையில் மாணவிகள் கல்வி பயிலும் நிலை உள்ளது. 20 மாணவிகளுக்கு ஒரு கழிப்பறை வசதி இருக்க வேண்டும். 12 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன.இங்கு இயற்பியல், தாவரவியல், விலங்கியல் போன்ற பாடங்களுக்கு ஆய்வு கூட வசதிகள் இல்லை. மாணவிகளுக்கு விளையாட விளையாட்டு மைதானம் இல்லை. போதுமான அலுவலர்கள் இல்லை.இதுபோன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கையானது ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.ராமநாதபுரம் நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் உரிய அடிப்படை வசதிகள் செய்துதர நகராட்சி நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை