உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலத்தில் செயல்படாத நுாலகம்

ஆர்.எஸ்.மங்கலத்தில் செயல்படாத நுாலகம்

ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தனியார் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்த நுாலகம் பல ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டியே கிடப்பதால் போட்டித் தேர்வு மாணவர்கள் சிரமம் அடைகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலத்தில் சுற்றுவட்டார கிராம மாணவர்கள் பயனடையும் வகையில் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் கட்டடத்தின் மேல் தளத்தில் நுாலகம் செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கட்டடம் பயன்பாடின்றி பூட்டப்பட்டுள்ளது.இதனால் பள்ளி கல்லுாரி மாணவர்களும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களும் நுாலகத்தில் உள்ள புத்தகங்களை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல ஆண்டுகளாக நுாலக கட்டடம் பூட்டியே கிடப்பதால் நுாலகத்தில் உள்ள புத்தகங்கள் சேதமடையும் வாய்ப்புகள் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நுாலகத்தில் உள்ள புத்தகங்களை பாதுகாக்கும் பொருட்டு நுாலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் அனைவரும் பயனடையும் வகையில் தரைத்தளத்தில் நுாலகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ