மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
16 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
16 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
16 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
16 hour(s) ago
ஆர்.எஸ்.மங்கலம் : பஸ் ஸ்டாண்டிலிருந்து புல்லமடை ரோட்டில் பள்ளிகள் மற்றும் ஏராளமான வழிபாட்டுத் தலங்கள் உள்ளதால் அப்பகுதியில் வேகத்தடைகள்அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து புல்லமடை செல்லும் ரோட்டில்கோயில் மற்றும் சர்ச் அமைந்துள்ளன. இதனால்,தினமும் வழிபாட்டு தளங்களுக்கு ஏராளமானோர் வந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் இந்த ரோட்டில்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளும், மின் வாரிய அலுவலகமும் அமைந்துள்ளன.இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் வாகன போக்குவரத்து உள்ளது. இந்நிலையில், அவ்ழியாக செல்லும் மற்ற வாகனங்கள் அதிவேகமாக ரோட்டில் செல்வதால் பள்ளி செல்லும் மாணவர்களும், வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பக்தர்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, ரோட்டின் முக்கிய பகுதிகளில் வேகத்தடைகள் அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago