பயன்பாடியின்றி வீணாகி வரும் குப்பைத்தொட்டி
கமுதி: கமுதி ஒன்றியத்தில் 53 ஊராட்சிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் ஆங்காங்கே குப்பை கொட்டுவதை தடுப்பதற்காக இரும்பு குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டது. தற்போது கமுதி ஒன்றியத்தில் ஊராட்சியில் வழங்கப்பட்ட குப்பைத்தொட்டிகள் பல இடங்களில் சேதமடைந்து பயன்பாடின்றி விணாகியது. இதனால் மக்கள் வேறுவழியின்றி குப்பையை கொட்டி வருவதால் ஆங்காங்கே பரவி கிடக்கிறது. இதனால் ரோட்டோரங்களில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் குப்பைத்தொட்டிகள் பராமரிக்கப்பட்டு சுகாதாரக் கேடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.