வீட்டின் மீது மரம் விழுந்தது
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்த நிலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சென்றது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் மீன்வளத்துறை அருகே உள்ள மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. அதே போல் ராமநாதபுரம் யானைக்கல் பகுதியில் அரண்மனை பின்புறம் உள்ள பழமையான வேப்ப மரக்கிளை அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பாதிப்பில்லை. தீயணைப்பு வீரர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர்.