உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காதலியை அரிவாளால் வெட்டிய இளைஞர்

காதலியை அரிவாளால் வெட்டிய இளைஞர்

பரமக்குடி : பரமக்குடி அருகே தன்னை விரும்பிய பெண் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த இளைஞர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பரமக்குடி அருகே கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்த இளம்பெண் பிரியங்கா 21. அதே ஊரைச் சேர்ந்தவர் சோபனன் 25. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பிய நிலையில் கடந்த ஆறு மாதமாக பிரியங்கா சோபனனிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று சோமனன், பிரியங்காவை தலையில் அரிவாளால் வெட்டி தப்பினார். தடுக்கச் சென்ற அவரது அக்கா நந்தினிக்கும் காயம் ஏற்பட்டது. பிரியங்கா ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சத்திரக்குடி போலீசார் இளைஞரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ