ஆடிப்பெருக்கு பூஜை
கீழக்கரை: -கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி மேலவலசையில் உள்ள பொன்னு சிறையெடுத்த அய்யனார் கோயிலில் இருந்து ஆடி 18 பெருக்கை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பங்கேற்ற சீர்வரிசை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அருகேயுள்ள 16 பிள்ளை காளியம்மன் கோயிலில் சீர்வரிசை பொருள்கள் வைக்கப்பட்டு மூலவருக்கு அபிஷேக, அலங்காரத்தில் தீபாரதனை நடந்தது. தாம்பூல பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.