மேலும் செய்திகள்
தலைமறைவு குற்றவாளிகள் கைது
22-Jul-2025
திருவாடானை: திருட்டு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். எஸ்.பி.பட்டினம் அருகே பனிச்சகுடி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் 30. இவர் 2018ல் மாடுகள் திருடியதால் போலீசார் கைது செய்து திருவாடானை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜாமினில் சென்றவர் கடந்த ஆறு மாதங்களாக வழக்கு விசாரணையின் போது ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ.,ரமேஷ் மற்றும் போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்து திருவாடானை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
22-Jul-2025