மேலும் செய்திகள்
சட்ட விரோதமாக மது விற்றவர் கைது
26-Nov-2024
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ராமேஸ்வரம் புதிய டி.எஸ்.பி., சாந்தமூர்த்தி தெரிவித்தார்.அதன்படி 2017 முதல் புனித நகர் ராமேஸ்வரத்தில் மது விற்க தமிழக அரசு தடை விதித்து இங்கிருந்து 12 கி.மீ.,ல் பாம்பனில் அரசு மதுக்கடையை அமைத்தது. ஆனால் ராமேஸ்வரத்தில் 100க்கும் மேற்பட்டோர் பாம்பனில் மதுபாட்டில்கள் வாங்கி வந்து கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மது விற்றனர். மேலும் கஞ்சா விற்பனையும் படுஜோராக இருந்ததால் பலரும் போதைக்கு அடிமையாகி அரை நிர்வாணத்தில் வீதியில் கிடப்பதால் தரக்குறைவாக பேசி ரோட்டில் ரகளை செய்தனர்.இதனை தடுத்து சட்ட விரோதமாக மது விற்போர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் புனித நகர் போதை நகரமாக மாறியது.இந்நிலையில் ராமேஸ்வரம் டி.எஸ்.பி., உமாதேவி அதிரடியாக மாற்றப்பட்டு இரு நாட்களுக்கு முன்பு புதிய டி.எஸ்.பி., சாந்தமூர்த்தி பொறுப்பேற்றார். டி.எஸ்.பி., கூறியதாவது:எஸ்.பி., உத்தரவின் படி ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களுக்கு பிரச்னை ஏற்படாதபடி சட்டம் ஒழுங்கு அமல்படுத்தப்படும்.மேலும் இங்கு சட்ட விரோதமாக மது விற்போர், கஞ்சா விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மக்கள் அச்சமின்றி புகார் தெரிவிக்கலாம் என்றார்.
26-Nov-2024