உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பர்மாவில் இருந்து தாயகம் திரும்பியவர் ஆவணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை

பர்மாவில் இருந்து தாயகம் திரும்பியவர் ஆவணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை

ராமநாதபுரம்: பர்மா மற்றும் இலங்கையில் இருந்து தாயகம்(தமிழகம்) திரும்பியவர்கள் வங்கி உள்ளிட்ட பிற அரசு நிறுவனங்கிளில் அடமானமாக வைத்த வீடு, பாஸ்போர்ட், நில ஆவணங்களை திருப்பி அவர்களுக்கே ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.பர்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோருக்கு வழங்கப்பட்ட வீட்டு கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட நிலம், பாஸ்போர்ட்கள் மற்றும் பிற ஆவணங்கள் அனைத்தையும் அவற்றில் உள்ள கடன் வழங்கப்பட்டது தொடர்பான விவரங்கள் அனைத்தையும் நீக்க ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க அரசு அறிவுரை வழங்கியுள்ளது.எனவே தகுதியுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அல்லது தாங்கள் கடன் பெற்ற வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ