| ADDED : ஜூன் 07, 2024 04:51 AM
மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதிகளான ராமநாதபுரம் மாவட்டம்சாயல்குடி அருகே ரோஜ்மா நகரில் இருந்து நரிப்பையூர், மூக்கையூர், மாரியூர், முந்தல், வாலிநோக்கம், சின்ன ஏர்வாடி,கீழக்கரை, பெரியபட்டினம், புதுமடம் மற்றும் தனுஷ்கோடி வரை 130 கி.மீ., உள்ள நீண்டகடற்கரை பகுதியை கொண்டது.இப்பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பீடி இலை பண்டல்கள், மஞ்சள் மூடைகள், கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள், சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டை, கடல் குதிரை உள்ளிட்ட பொருட்களும் தங்கம் உள்ளிட்டவையும்கடத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த பொருட்களை சரக்கு வாகனங்கள் டூவீலர்களை பயன்படுத்தி கடற்கரைக்கு கொண்டு வருகின்றனர்.இக்கடத்தல் பிரச்னையில் தீவிரம் தெரியாதஇளைஞர்களை வேலைக்கு அனுப்பி வைக்கின்றனர். எந்த பொருள் எங்கிருந்து வருகிறது. யாருக்கு வழங்கப்படுகிறது என்ற விபரங்கள் அவர்களுக்கு தெரியாது. ஆனால் சிக்கினால் அவர்கள் வாழ்க்கை பாழாகிவிடும். எனவே கடத்தலை தடுக்க குற்றப்புலனாய்வுத்துறை, நுண்ணறிவு துறை போலீசார், போதைப்பொருள் தடுப்பு போலீசார், சுங்கத்துறை அதிகாரிகள், கடலோர காவல் படையினர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் உரிய முறையில் கூட்டு ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.