ஊராட்சிகளில் துாய்மை பணிக்கு கூடுதல் எலக்ட்ரிக் ஆட்டோக்கள்
திருப்புல்லாணி: திருப்புல்லாணி யூனியன் அலுவலக வளாகத்தில் 33 கிராம ஊராட்சிகளுக்கும் வழங்குவதற்காக புதிய எலக்ட்ரிக் ஆட்டோக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஊராட்சிகளில் துாய்மைப் பணியை மேற்கொள்வோருக்கு எளிதாக தெருக்களுக்கு செல்லும் வகையில் மின்சாரத்தால் சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்பு வழங்கு வதற்கு ஏற்ப ஸ்பீக்கரும் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு எலக்ட்ரிக் ஆட்டோக்கள் வழங்கப்பட உள்ளது என யூனியன் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.