உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 107வது பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலத்தில் அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் திருமலை, ராஜா முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் ரஹ்மத்துல்லா வரவேற்றார். மாவட்டச் செயலாளர் முனியசாமி பேசினார். தி.மு.க., அரசின் செயலற்ற நிர்வாகத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது.சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்ட ஏழை மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி