வேளாண் அலுவலக கட்டடம் சேதம்
திருவாடானை : திருவாடானையில் வேளாண் அலுவலக கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.திருவாடானை பாரதிநகரில் வேளாண் அலுவலகம் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கட்டடத்தில் விவசாயிகளுக்கு பயிற்சிகள் நடத்தப்படுகிறது. மாடியில் தோட்டக்கலைத்துறை அலுவலகம் உள்ளது.கட்டடம் சேதமடைந்து மழை நீர் இறங்குவதால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கூறியதாவது: விவசாயத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வேளாண் அலுவலகம் சேதமடைந்துள்ளது. விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழையும் போது அச்சமாக உள்ளது. கட்டடத்தை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.