வேளாண் தொழில் நுட்பம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
ராமநாதபுரம் : மண்டபம் வட்டாரத்தில் தமிழ்நாடு அரசு வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு தெருக்கூத்து கலை நிகழ்ச்சி மூலம் தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.என்மனம் கொண்டான், கும்பரம், தாமரைக் குளம் மற்றும் இரட்டையூரணி, வெள்ளரி ஓடை ஆகிய கிராமங்களில் கலைக்குழு வாயிலாக வேளாண் துறை நலத் திட்டங்கள், அடுக்ககம் திட்டத்தில் பிரத்தியேக விவசாய அடையாள எண் பதிவு செய்வது மற்றும் கோடை உழவு செய்வதன் அவசியம், சிறுதானியங்களை சாகுபடி செய்வதன் முக்கியத்துவம், உழவன் செயலி பயன்பாடு, மண் மாதிரி சேகரம் செய்ய வேண்டியதன் அவசியம், தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மண்டபம் வட்டார துணை வேளாண்மை அலுவலர் தாமஸ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி, உச்சிப்புளி உதவி தொழில்நுட்ப மேலாளர் சோனியா, விவசாயிகள் பங்கேற்றனர்.