அழகன்குளம் கடற்கரையில் துப்புரவு பணி: கடலுக்கு ஆரத்தி
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அழகன்குளம் கடற்கரையில் துாய்மைப்பணி மேற்கொண்ட அப்பகுதிமக்கள் கடலுக்கு ஆரத்தி எடுத்தனர். தமிழகம் முழுவதும் கடற்கரைப்பகுதிகளில் துாய்மைப்பணியில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக ராமநாதபுரம் அருகே அழகன்குளம் கடற்கரையில் அந்த கிராம தன்னார்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் இணைந்து துாய்மைப் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி பொறுப்பாளர் மேகநாதன், முருகானந்தம் முன்னிலையில் ஊராட்சி நிர்வாகம் ஒத்துழைப்புடன் பாலிதீன் போன்ற மக்காத குப்பையை சேகரித்து அப்புறப்படுத்தினர்.பின் கடல் அன்னைக்கு ஆரத்தி எடுத்து வணங்கினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஆடலரசன்பேசினார். இதில் மீனவர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.