உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பரமக்குடியில் அன்னை சாரதாதேவி ஜெயந்தி விழாவில் அன்ன பூஜை

 பரமக்குடியில் அன்னை சாரதாதேவி ஜெயந்தி விழாவில் அன்ன பூஜை

பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் விவேகானந்தா கேந்திரம் கன்னியா குமரி கிராம முன்னேற்ற டிரஸ்ட் சார்பில் அன்ன பூஜை விழா நடந்தது. அப்போது அன்னை சாரதா தேவி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. காலை 10:00 மணிக்கு பஜனை, அன்ன பூர்ணா ஸ்தோத்திரம், பகவத் கீதையின் விஸ்வரூப தரிசன பாராயணம் செய்யப்பட்டது. துாத்துக்குடி விவே கானந்தா கேந்திர திட்ட செயலாளர் ஐயப்பன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். விழாவில் சேகரிக்கப்பட்ட அரிசி தென் தமிழகத்தில் செயல்படும் 75 பாலர் பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. இதன்படி ராமநாத புரம் மாவட்டத்தில் 16 பாலர் பள்ளிகள் இயங்கி வருகிறது. இங்கு உள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கும் வகையில் அரிசி சேகரிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ