மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
16-Oct-2024
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சிவன்கோயில் கிழக்கு ரதவீதியில் முகவை ஊருணி கரையில் அமைந்துள்ள அன்னதான விநாயகர் கோயிலில் வருடாபிேஷக விழா நடந்தது. சிவாச்சாரியர்கள் தேவேந்திரன், ரமேஷ் ஆகியோர் வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜை நடந்தது. விநாயகருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபிேஷகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.சிவன் கோயில் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திவான் பழனிவேல் பாண்டியன், சரக செயல் அலுவலர் கிர்தரன், ஆலயத்தொண்டர்கள் பழனிச்சாமி, மனோகரன், விஜயராணி செய்தனர்.
16-Oct-2024