உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேக விழா

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொத்திடல் களக்குடி வெள்ளம்புலி தர்ம முனீஸ்வரர் கோயில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக, யாக வேள்விகள் அமைக்கப்பட்டு, 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை, குலதெய்வ வழிபாட்டாளர்கள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ