கோயிலில் வருடாபிஷேகம்
கமுதி: கமுதி அருகே கல்லுப்பட்டி கிராமத்தில் உள்ள சுல்லக்கரை காளியம்மன் கோயில் வருடாபிஷேகம் பூஜை நடந்தது. யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. சுல்லக்கரை காளியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உட்பட 21 வகை அபிஷேகம் நடந்தது.மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. கிராம மக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடந்தது. விழாவில் கமுதி, நாராயணபுரம், கல்லுப்பட்டி சுற்றியுள்ள மக்கள் கலந்து கொண்டனர்.