உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரூ.80 லட்சம் கஞ்சா பறிமுதல் வழக்கு: மேலும் ஒருவர் கைது

ரூ.80 லட்சம் கஞ்சா பறிமுதல் வழக்கு: மேலும் ஒருவர் கைது

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ரூ. 80 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜூலை 5ல் தீர்த்தாண்டதானம் கடற்கரையில் எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ., ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிப்பதாக நின்ற இருவரை சோதனையிட்டனர். அவர்கள் வைத்திருந்த சாக்கு மூடையில் கஞ்சா பார்சல்கள் இருந்தது தெரிந்தது. ரூ.80 லட்சம் மதிப்புள்ள 78 கிலோவை கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் மீமசல் தெற்கு தெருவைச் சேர்ந்த மாது 31, தொண்டி அருகே புதுக்குடியைச் சேர்ந்த சமயக்கண்ணு 24, ஆகியோரை கைது செய்தனர். தப்பிய நான்கு பேரை தேடிவந்தனர். இவ்வழக்கில் திருப்பூரில் பதுங்கியிருந்த வட்டாணம் புதுக்குடியைச் சேர்ந்த பாண்டித்துரையை 28, போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ