உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு

பள்ளியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு

கடலாடி: கடலாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிட்., சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் நாகராஜன் தலைமை வகித்தார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் துணைப் பொது மேலாளர் சிவகுருநாதன் முன்னிலை வகித்தார். மேலாளர் ஸ்ரீகாந்த் தேஜா பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது. உறுதிமொழி எடுக்கப்பட்டது. அறிவியல் மன்ற பொறுப்பாசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சொக்கர் நன்றி கூறினார். தமிழாசிரியர் சக்தி குமார் தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ