உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரி மாணவருக்கு  தொல்லியல் பயிற்சி

கல்லுாரி மாணவருக்கு  தொல்லியல் பயிற்சி

ராமநாதபுரம்; பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி வரலாற்றுத் துறை சார்பில் முதுகலை 2ம் ஆண்டு மாணவர்கள், தொழில் சார் கல்விப் பயிற்சிக்காக திருப்புல்லாணியில் உள்ள ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், அரண்மனை, கோரைக்குட்டம் சமண தீர்த்தங்கரர் சிற்பம், உப்பங்கழி ஆகிய வரலாற்றுச் சின்னங்களை நேரில் பார்வையிட்டனர். திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலர் ராஜகுரு, சேதுபதி கால அரண்மனையின் அமைப்பு, அதன் வரலாறு, கோரைக்குட்டம் கொட்டகுடி ஆற்றின் கரையில் உள்ள தலை இல்லாத 9-ம் நுாற்றாண்டு 24ம் சமண தீர்ந்தங்கரர் மகாவீரரின் சிற்ப அமைப்பு, பண்டைக்காலத்தில் இயற்கைத் துறைமுகங்களை உருவாக்கிய உப்பங்கழிகள், ஆதிஜெகநாதர் கோயிலின் கட்டடக்கலை, சிற்பக்கலை, கல்வெட்டுகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். நிகழ்ச்சியில் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் பாரதி கலந்து கொண்டார். பின்னர் மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலையும் மாணவர்கள் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ