உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் வாக்குவாதம்

 அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் வாக்குவாதம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் எஸ்.ஐ. ஆர்., தொடர்பான அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் முதுகுளத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட எஸ்.ஐ. ஆர்., படிவம் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜா தலைமை வகித்தார். தாசில்தார்கள் முதுகுளத்துார் கோகுல்நாத், கமுதி ஸ்ரீராம், கடலாடி பரமசிவம் முன்னிலை வகித்தனர். தற்போது எஸ்.ஐ. ஆர்., விண்ணப்பம் பதிவு செய்வதில் அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் வசிப்பவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதாகவும் அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டி அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். வெளி மாநிலம்,வெளி மாவட்டங்களில் வசிப்பவர்களை பட்டியலில் சேர்ப்பது கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமாக தற்காலிக வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதற்கு பிறகு தான் நிரந்தரமான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். உடன் அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து, கருமலையான், செந்தில்குமார், மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர் சண்முகய்யா பாண்டியன், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் கதிரேசன், பா.ஜ.,சார்பில் மாநில விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் இளையராஜா, மண்டல பார்வையாளர் சேதுராமு உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி