உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆயுதப்படை வாகனங்கள் ஜூலை 11ல் பொது ஏலம் 

ஆயுதப்படை வாகனங்கள் ஜூலை 11ல் பொது ஏலம் 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் யுதப்படை வாகனப்பிரிவில் கழிவு செய்யப்பட்ட வாகனங்களை ஜூலை 11ல் காலை 10:30 மணிக்கு பொது ஏலம் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற உள்ளது.பொது ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 8 வாகனங்களை பார்வையிட்டு ஜூலை 8க்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு தலா ரூ.1000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.2000 முன்பதிவாக செலுத்த வேண்டும். எந்த வாகனத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டுஉள்ளதோ, அந்த வாகனத்திற்கு அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி., வரி தனியாக வசூலிக்கப்படும் என எஸ்.பி., சந்தீஷ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ