உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா

ராமநாதபுரம்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள சிவன்கோயில்களில் நடராஜருக்கு அபிேஷக, அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.ராமநாதபுரம் வெளிப்பட்டணம் சவுபாக்கிய நாயகி சமேத ரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, நடராஜருக்கு சித்திரவர்ணம், மஞ்சள், சிவப்பு, சந்தன என தினமும் சிறப்பு அலங்காரம் செய்தனர். நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அதிகாலையில் அபிேஷகத்துடன் நடராஜருக்கு அபிேஷகங்கள் நடந்தன, யாகபூஜையுடன் அதிகாலை 4:30 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடராஜருக்கு அபிேஷக அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுடன் வீதி உலா வந்தார்.இதுபோல் ராமநாதபுரம் மீனாட்சி சமதே சொக்கநாதர் கோயிலில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு அபிேஷக அலங்காரத்தில் அதிகாலையில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. அழகன் குளம் சிவகாமி சமேத நடராஜர் கோயிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர். திருவாடானை: ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.அதிகாலை 4:45 மணிக்கு பள்ளியறை பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசருக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் போன்ற பல்வேறு அபிேஷகங்கள் நடந்தது. திருவாசகம் பக்தி பாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி ஈஸ்வரன் கோயிலில் சிவகாமி சமேத நடராஜர் மூர்த்தியின் ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்வு நடந்தது. நேற்று அதிகாலையில் பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தது. கோ பூஜையுடன் மூலவருக்கு தீபாராதனை நடந்தது.உற்ஸவர் திருவீதி உலா வந்தார். இரவு பஞ்சமூர்த்திகளுக்கு சோடஷ தீபாராதனைகள் நடந்தது.*பரமக்குடி எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் நடராஜருக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. *நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் சிவகாமி சமேத நடராஜருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடந்து தீபாராதனைகள் நடந்தது.*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உற்ஸவருக்கு அபிஷேகம் நடந்து காலையில் திருவீதி உலா வந்தார். பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை