கண்மாய்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
முதுகுளத்துார்:தாசில்தாரிடம் அனுமதி பெற்று சவடுமண் அள்ளப்பட்டு வரும் நிலையில் முதுகுளத்துார் கண்மாய்களில் ஒரே இடத்தில் பள்ளம் ஏற்படுவதால் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். முதுகுளத்துார் தாலுகா விற்கு உட்பட்ட கிராமங்களில் தாசில்தாரிடம் அனுமதி பெற்று சவடு மண் அள்ளப்பட்டு பள்ளங் களில் கொட்டப்பட்டு வருகிறது. கடந்தாண்டுக்கு முன் முதுகுளத்துார் பெரிய கண்மாயில் ஒரே இடத்தில் தோண்டப்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் பள்ளத்தில் மட்டும் மழைநீர் தேங்கியது. அப்போது விளையாடும் போது பள்ளத்தில் விழுந்து பிளஸ் 1 மாணவர் இறந்தார். எனவே இது போன்று ஏதாவது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது முதுகுளத்துாரை சுற்றியுள்ள கண்மாய்களில் சவடுமண் அள்ளப்பட்டு வருகிறது. எனவே சவடு மண் அள்ளப்படும் பகுதிகளில் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து ஒரே இடத்தில் அள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.