விழிப்புணர்வு முகாம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி ஊராட்சி தொட்டிவலசை கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. கால்நடை உதவி இயக்குனர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். உதவி டாக்டர்கள் வினிதா, மோகன் முன்னிலை வகித்தனர். கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்தல், குடற்புழு நீக்கம், உடல் பரிசோதனை, அறுவை சிகிச்சை, கால்கானை, வாய்கானை உட்பட பல்வேறு பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்தினர். முகாமில் 65 பேரின் 1789 கால் நடைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கால்நடை வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினர். பின் சிறந்த முறையில் கால்நடைகள் வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு சான்றிதழ் வழங்கப் பட்டது. உடன் கால்நடை ஆய்வாளர் வீரன், முனீஸ்வரி உட்பட பணியாளர்கள் பலர் இருந்தனர்.