உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

பரமக்குடி: போகலுார் ஒன்றியம் பூவளத்துார் கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பரமக்குடி கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். டாக்டர்கள் நந்தினி, ரஜினி சிகிச்சை அளித்தனர். ஆய்வாளர் சுப்பிரமணி வரவேற்றார். முகாமில் 38 விவசாயிகளின் 1771 கால்நடைகள் பயனடைந்தன. இதில் செம்மறி ஆடு, வெள்ளாடு, நாய், கோழி என சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்நடைகளுக்கான நோய் மற்றும் விழிப் புணர்வு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. கால்நடை பரா மரிப்பு உதவியாளர் நாக ராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை