உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  விழிப்புணர்வு முகாம்

 விழிப்புணர்வு முகாம்

பரமக்குடி: பரமக்குடியில் மாவட்ட அளவிலான சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் 'ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்' என்ற விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., தங்க கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பரமக்குடி டி.எஸ்.பி., ஜெபராஜ் வரவேற்றார். ஆதி திராவிட நல விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் சுந்தர வடிவேலு, செல்வி, பூமிநாதன் வாழ்த்தினர். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரிபுர சுந்தரி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி, பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவணன் பெருமாள் பேசினர். தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை