மீனவர்களுக்கு விழிப்புணர்வு
தொண்டி : தொண்டி அருகே சோலியக்குடி லாஞ்சியடியில் விசைபடகு மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் (வடக்கு) மீன்வள உதவி இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கடலில் 5 நாட்டிகல் தொலைவிற்கு அப்பால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும். கரையோரத்தில் மீன்பிடித்து நாட்டுப்படகு மீனவர்களுடன் மோதல் போக்கை உருவாக்கக் கூடாது. கடலில் மீனவர்கள் அனைவரும் அடையாள அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மீன்வளத்துறை ஆய்வாளர்கள் சிந்துஜா, அபுதாகிர், கடல் அமலாக்க பிரிவு எஸ்.ஐ., குருநாதன் கலந்து கொண்டனர்.