உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே திருவரங்கம் திருஇருதய மேல்நிலைப்பள்ளியில் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லுாரி மாணவிகள் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமையாசிரியர் சேவியர் தலைமை வகித்தார்.பள்ளி வளாகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய விதிகளில் ஊர்வலமாக மாணவர்கள் சென்றனர். உடன் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ