உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெண்களுக்கு எதிரான வன்முறையை நீக்குதல் விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண்களுக்கு எதிரான வன்முறையை நீக்குதல் விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருப்புல்லாணி : ராமநாதபுரம் அருகே குதக்கோட்டை ஊராட்சியில் உள்ள அரசு சட்டக் கல்லுாரியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை நீக்குதல் மற்றும் பாலின பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தலைமை வகித்தார். ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலை வகித்தார்.கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ், சென்னை இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கல்பனா, மதுரை லேடி டோக் கல்லுாரி ஓய்வு பேராசிரியர் கரோலின் நேசபாய், பேராசிரியர் நிர்மலா கார், மதுரை அமெரிக்கன் கல்லுாரி பேராசிரியர் அகஸ்டஸ் ஜூலியன் லேஸ்மே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இவர்கள் பெண் கல்வி மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு, சிறுவர் சிறுமிகளின் மீதான பாலின வன்முறை தாக்குதலில் இருந்து பாதுகாத்தல், சட்ட விழிப்புணர்வுகளை சட்ட நுணுக்கங்களுடன் விளக்கிக் கூறினர். அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் ஜேம்ஸ் ஜெயபால் வாழ்த்தி பேசினார்.அரசு சட்டக் கல்லுாரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், வருவாய்த்துறையினர், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மகிளா கோர்ட் விரைவு நீதிபதி கவிதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ