மேலும் செய்திகள்
விஷ்வன்கர் பள்ளியில் கலைக்களஞ்சிய விழா
29-Sep-2025
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே ஆர்.எஸ்.மடை அமிர்த வித்யாலயா பள்ளியில் கே.ஜி., மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிக்கொண்டு வரும் சிசு உற்ஸவ விழா நடந்தது. பள்ளி மேலாளர் லட்சுமி அம்மா துவக்கி வைத்தார். முதல்வர் கோகிலா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் தீரஜ் லட்சுமண பாரதி நிகழ்வை தொகுத்தார். பள்ளியின் மழலையர் வகுப்பு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒருங்கிணைத்தனர். ஏழுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 150 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். வண்ணம் தீட்டுதல், பாட்டு போட்டி, கதை சொல்லுதல், திருக்குறள் ஒப்புவித்தல், ஞாபக சக்தி மற்றும் களிமண்ணில் பல உருவங்கள் செய்தல், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டன. பெற்றோர்களுக்கான காய்கறிகளில் கலைத்திறன் மற்றும் அடுப்பில்லாமல் சமைத்தல் போன்ற போட்டிகள் நடந்தது.
29-Sep-2025