உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாரியூரில் அம்மனுக்கு நாளை வளைகாப்பு

மாரியூரில் அம்மனுக்கு நாளை வளைகாப்பு

சாயல்குடி:சாயல்குடி அருகே மாரியூரில் பூவேந்தியநாதர் பவள நிறவல்லியம்மன் கோயில் உள்ளது. வருண பகவானால் பூஜிக்கப்பட்ட கடற்கரை அருகே அமைந்துள்ள கோயில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற சிவாலயம். நாளை (ஜூலை 28) காலை 6:00 மணிக்கு ஏராளமான பசுக்களை முன்னிறுத்தி கோமாதா பூஜையும், காலை 8:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்ஸவமூர்த்தியான பவளநிற வல்லியம்மனுக்கு, அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு வளைகாப்பு உற்ஸவமும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் பங்கேற்கும் சுமங்கலி பூஜை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் பவளம் மகளிர் குழு, மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை