உத்தரகோசமங்கையில் அடிப்படை வசதி: ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு
உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஏப்.,4ல் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு குடிநீர், கழிப்பறை, குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்துள்ளது.கோயில் நான்கு ரத வீதிகளிலும் குப்பை அகற்றுவதற்கு தொட்டிகள் வைக்கப்படுகின்றன.குடிநீர் தொட்டிகள், கார் பார்க்கிங் வசதி, சுகாதார பொது கழிப்பறை வளாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உத்தரகோசமங்கை ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:கோயில் அருகே குப்பை தேங்கினால் அவற்றை உடனுக்குடன் அள்ளுவதற்கான டிராக்டர்கள் வசதி, வராகி அம்மன் கோயில் வளாகம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படுகிறது என்றனர்.