ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து பா.ஜ., ஊர்வலம்
ஆர்.எஸ்.மங்கலம் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலாப்பயணிகளை சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடியாக 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை இந்திய ராணுவ வீரர்கள் துல்லியமாக அழித்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பா.ஜ., சார்பில் ஆர்.எஸ். மங்கலத்தில் தேசியக் கொடி ஏந்தி ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஊர்வலம் நடந்தது.ஒன்றிய பொறுப்பாளர் வடிவேலன் தலைமை வகித்தார். ஊர்வலத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் மாநில துணைத்தலைவர் குப்புராம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சண்முகநாதன், குமார், ஒன்றிய நிர்வாகிகள் சசிக்கனி, பாண்டித்துரை, கிஷோர் குமார், செந்தில்குமார், செல்லத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.