உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் பா.ஜ.,வினர் தேசியக்கொடி யாத்திரை

பரமக்குடியில் பா.ஜ.,வினர் தேசியக்கொடி யாத்திரை

பரமக்குடி: சுதந்திர தின விழாவையொட்டி பரமக்குடி நகர் பா.ஜ., சார்பில் தேசியக்கொடி (திரங்கா) யாத்திரை நடந்தது. பரமக்குடி நகர் தலைவர் சுரேஷ்பாபு தங்கராஜ் தலைமையில் நடந்த ஊர்வலம் சந்தை கடை பகுதியில் துவங்கியது. ஏராளமானோர் தேசிய கொடியை ஏந்தியபடி ஆர்ச், காந்தி சிலை, பெரிய கடை வீதி வழியாக பெருமாள் கோயில் முன்பு வந்தடைந்தனர். அங்கு சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் தியாகத்தை போற்றும் விதமாக பேசினர். இதில் மாநில பொதுச் செயலாளர் பொன்பாலகணபதி, நகர் பொதுச் செயலாளர் பிரகாஷ் ராவ், மாவட்ட துணைத் தலைவர் குமார், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !