மேலும் செய்திகள்
பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்
18-Sep-2025
ராமநாதபுரம் : பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பா.ஜ., தொண்டர்கள் ரத்ததானம் அளித்தனர். ராமநாதபுரம் அரண்மனை அருகே பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நுாறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பா.ஜ., தொண்டர்கள் 30 பேர் ரத்ததானம் செய்தனர்.நிகழ்வில் தென்னை வாரிய தலைவர் சுப நாகராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், பொதுச் செயலாளர்கள் குமார், சண்முகநாதன், மாவட்ட செயலாளர் சிவசங்கர், துணைத் தலைவர் முத்துசாமி, சவுந்தரராஜன், பொருளாளர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கமுதி: கமுதி பா.ஜ., மத்திய ஒன்றியம் சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய தலைவர் பூபதிராஜா தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கணபதி முன்னிலை வகித்தார். மீனாட்சி அம்மன் கோயில் சிறப்பு பூஜை செய்தி இனிப்பு வழங்கப்பட்டது. துாய்மை இந்தியா என்ற கனவை நிறைவேற்றும் பொருட்டு கோயிலில் துாய்மைப் பணி செய்தனர். உடன் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர். இதேபோன்று கமுதி தெற்கு மண்டல பா.ஜ., சார்பில் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது.தெற்கு மண்டல தலைவர் வேலவன் தலைமை வகித்தார். முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை, கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். உடன் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
18-Sep-2025