உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கருப்பட்டி விலை உயர்வு; கிலோ ரூ.370க்கு விற்பனை

கருப்பட்டி விலை உயர்வு; கிலோ ரூ.370க்கு விற்பனை

சாயல்குடி : ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, காவாகுளம், மேலச்செல்வனுார், கீழச்செல்வனுார், நரிப்பையூர், கன்னிராஜபுரம், உறை கிணறு ஆகிய இடங்களில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. தை முதல் ஆவணி மாதம் வரை, பனை மரக்காடுகளில் குடிசை அமைத்து, பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சி வியாபாரிகளுக்கு விற்கின்றனர்.சாயல்குடி அருகே பூப்பாண்டியபுரம் வியாபாரி ஜெயபாண்டியன் கூறியதாவது:சாயல்குடி கருப்பட்டிக்கு தனிமவுசு உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி மதுரை, சென்னை, கோவை மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. சீசன் காலங்களில் கிலோ கருப்பட்டி, 220 முதல் 300 வரை விற்றது. தற்போது, 350 முதல் 370 ரூபாய் வரை விற்கிறது. சீசன் இல்லாததால், உற்பத்தி குறைந்து விலை உயர்ந்துள்ளது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி