மேலும் செய்திகள்
கீழக்கரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
20-Jul-2025
கீழக்கரை; கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம், யூத் ரெட் கிராஸ் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் சுமையா தலைமை வகித்தார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் சுந்தரம் முன்னிலை வகித்தார். செயலாளர் ரமேஷ் வரவேற்றார். பொருளாளர் குணசேகரன் மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் பால முருகன், கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் சிவகார்த்திகேயன், செயலாளர் ஆண்டனி சதீஷ், பொருளாளர் சபீக், வட்டார மருத்துவ அலுவலர் ராசிக்தீன், கல்லுாரி யூத் கிளாஸ் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை, மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் மணிமொழி, விமலா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நுாறுக்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்தும் ஆபத்துக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி குறித்தும் மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
20-Jul-2025